Description
Author : C.Mohan
Publisher : Bodhivanam
Page : 152
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.