உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்

முக்கியத் தீர்ப்புகள்:

நீதிமன்றங்களில் தமிழே பயன்பாட்டு மொழியாகவேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் உயர்ந்த நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகள் ஆங்கிலத்திலேயே உள்ளன. மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன், நீதிமன்றங்களில் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முக்கிய தீர்ப்புகளும் இதில் அடங்கும். இவற்றை தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்தவழக்குகள் பலவற்றில் வாதிட்டு இந்த தீர்ப்புகளைப் பெற்றுத்தந்திருப்பவர் பின்னாளில் நீதிபதி ஆக பதவி வகித்த சந்துரு. அவர் மூத்த வழக்கறிஞராக இருந்தபோது இந்த வழக்குகளில் வாதாடி இருக்கிறார். அவருக்குத்தான் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவற்றை நிலை நாட்டிய தீர்ப்புகள் இவை.  மனித உரிமை ஆர்வலர்கள்,மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுகிறவர்களுக்கு இந்தநூல் கைவிளக்காக இருக்கக்கூடும். தமித்தலட்சுமி தீனதயாளன்  சிறப்பாக இந்தத் தீர்ப்புகளை தமிழில் தந்துள்ளார்.

உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள், தமிழ்க்குலம் பதிப்பாலயம், 119/ஏ, டிப்போலைன்,

சி.பல்லாவரம், சென்னை-43