பதிவுகள்

சுவையான பதிவுகள்:

இணையதளத்தின் வீச்சைப் பயன்படுத்திக்கொண்டு உருப்படியாக கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறவர்கள் மிகவும் சிலரே. அதில் பேராசிரியர் மு.நாகநாதனும் ஒருவர். அவ்வப்போது ஏற்படும் அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளையொட்டிய தன் கருத்துகளை முகநூலில் எழுதிவருகிறார்.  தான் சார்ந்திருக்கும் திராவிட, பொருளாதார, சமூகநீதிக் கொள்கைகளின் அடிப்படையில் வரலாற்று உணர்வுடன் இந்தக் குறிப்புகளை அவர் எழுதி உள்ளார். அறிஞர் அண்ணா முதல்வராகி, முதல்முறை புதுடெல்லிக்குச் செல்கிறார். காலை 7மணி பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளர் தொலைபேசியில் அழைக்கிறார். அண்ணா பேசவில்லை. அடுத்து தனிச்செயலர் அழைக்கிறார். அண்ணா, குளிக்கச் செல்வதாகக் கூறச்சொல்கிறார். நேரடியாக பிரதமர் இந்திரா காந்தியே அழைத்தபோது போனில் பேசுகிறார். அவர் அழைப்பின்பேரில் காலை உணவுக்கு அவர் இல்லம் செல்கிறார்- இந்தச் சம்பவம் போல பல சுவையான பதிவுகளும் உள்ளன.

பதிவுகள், பேராசிரியர் மு.நாகநாதன்,

கதிரொளி பதிப்பகம், எண் 14, சிவசங்கரன் மாடிக்குடியிருப்பு,

சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை 86