நெசவு

நூல் குறித்த நூல்

திருப்பூரில் வாழும் எழுத்தாளரான சுப்ரபாரதிமணியன் தன் ஊரின் பிரதானத் தொழிலான நெசவுத் தொழிலைத் தன் எழுத்தில் வடித் ததன் தொகுப்பு இது. நெசவு பற்றி எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், நாவலின் சில பகுதிகள், நாவல் பற்றிய விமர்சனங்கள் இந்த சிறுநூலில் இடம் பெற்றுள்ளன. என்னதான் நெசவாளன் கலை நயத்துடன் பணிபுரிந்தாலும் அந்தச் சேலையை விற்கும் கடையின் பெயர்தான் இருக்கும் நெசவாளனின் பெயர் இருக்காது என்று வருத்தப்படுகிறார். நெசவாளர்கள் சாதிய ரீதியாக எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவர்களின் அரசியல் சார்பு, நம்பிக்கைகள்,  வறுமை என எல்லாவற்றையும்  பேசுகின்றன           சிறுகதைகள். வாசிப்பவர்களை நெசவாளர்களின் அசலான உலகுக்குள் கைப்பிடித்து இட்டுச்செல்லும் நூல் இது!

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், 8/3448, அண்ணா நகர், பூலவப்பட்டி, திருப்பூர் 641602