ராஜீவ்படுகொலை: தூக்குக்கயிற்றில்நிஜம்

ஸ்ரீபெரும்புதூரில் 1991ல்நடந்தராஜீவ்காந்திபடுகொலைஒட்டுமொத்ததமிழினவரலாற்றில்பெரும்மாறுதல்களைஏற்படுத்தியஒன்று. இன்றுஅதுமுள்ளிவாய்க்காலில்தமிழினம்அழிக்கப்பட்டநிகழ்வுவரைக்கும்பெரும்பாதிப்புகளைஏற்படுத்திஇருக்கிறது. அந்தபடுகொலைமட்டும்நடக்காமல்இருந்திருந்தால்இந்தியவரலாறுநிச்சயமாகவேறாகஇருந்திருக்கும். ஒருவேளைஇலங்கையில்நிலைமைகூடஇப்போதிருப்பதில்இருந்துமுற்றிலும்வேறாகஇருந்திருக்கலாம். இவ்வளவுமுக்கியமானஇந்நிகழ்ச்சிபல்வேறுவிதமானகருத்துக்களைஇந்தியஅளவில்ஏற்படுத்தியது. பலபுத்தகங்களும்இதையொட்டிஎழுதப்பட்டன. இவற்றில்தமிழினத்துக்குஆதரவாகஇப்படுகொலைமீதுஇருக்கும்சந்தேகங்களைவிளக்கி,

வந்திருக்கும்நூல்இது.திருச்சிவேலுச்சாமிடாக்டர்சுப்ரமணியம்சுவாமியின்உடன்பயணித்தஅரசியல்வாதி. அவர்ஜெயின்கமிஷனில்சுவாமியைஎதிர்கொண்டது, வாழப்பாடியாரைநம்பிஏமாந்தது,ஜெயலலிதா, சோனியாஆகியோரால்இவர்தாக்கல்செய்தஜெயின்கமிஷன்அபிடவிட்தொடர்பாகஅழைத்துவிவரம்கேட்கப்பட்டதுஎன்றுபல்வேறுசம்பவங்களைஇந்நூலில்விரிவாகப்பதிவுசெய்திருக்கிறார்.

ராஜீவ்கொலையைவிசாரித்தசிபிஐஅதிகாரிகள்முன்முடிவுடன்தான்விசாரணையைநடத்தினார்கள்என்றுசொல்லும்வேலுச்சாமிபல்நோக்குபுலன்விசாரணைக்குழுவிடம்தான்எதிர்கொண்ட

விசாரணையையும்சுவாரசியமாகவிவரித்துள்ளார். ராஜீவ்கொலைவிசாரணைமட்டுமல்லாமல்அவரதுகொலையாளிகள்என்றுகுற்றம்சாட்டப்பட்டுதூக்குக்கயிற்றின்நிழலில்இருக்கும்மூவரின்விடுதலைக்காகநடக்கும்போராட்டங்களிலும்சிலமுக்கியமானசெயல்களைஅவர்புரிந்திருந்திருப்பதும்இங்கேதொகுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பானநடையில்பத்திரிகையாளர்பா. ஏகலைவன்திருச்சிவேலுசாமிதரும்தகவல்களைக்கையாண்டுள்ளார்.

வெளியீடு :பேட்ரிஷியாபதிப்பகம், 2/40, பி, இரண்டாம்தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை600061.