குற்றம், தண்டனை,மரண தண்டனை

மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்படும் கருத்தியலாளர் .மார்க்ஸின் குற்றம், தண்டனை, மரண தண்டனை என்ற நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கிறது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப் பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாதங்கள் இதில் உள்ளன. நமது தூக்குமுறை வலி நிறைந்ததாகவும் இழிவுமிக்கதாகவுமே உள்ளது என்கிறார் .மார்க்ஸ். தூக்கிலிடப் படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச்சேர்ந்தவர்கள். அவர்களது  மரணத்தால் துன்புறுவோரும் அடித்தளச் சமூக மக்களே என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

ஆசிரியர்:  அ.மார்க்ஸ், வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை5