பிரியங்களின் அந்தாதி

கவிஞர் இவள் பாரதியின் ஏழாவது தொகுப்பு பிரியங்களின் அந்தாதி. தன்னைச் சுற்றி நடப்பவற்றை விமர்சனமாகப் பார்ப்பது, சூழல் மீது அக்கறைகள் கொள்வது, காதலின் அக உணர்வுகளை, புற உணர்வுகளைப் பதிவு செய்வது,சகமனிதர்கள் உடனான உறவுகள், குடும்பம், நட்பு பற்றிய பிரத்யேகப் பார்வைகள், சுய வலிகள், என நல்ல வாசிப்பனுப வத்தைத் தருகின்றன இக்கவிதைகள். தாத்தாவுக்கு காதல் கவிதைகள் எழுதினால் பிடிப்பதில்லை/ தம்பிக்குக் கவிதைகளே பிடிப்பதில்லை/ தங்கைக்கு எப்போதாவது பிடிக்கும்/அப்பாவுக்கு எப்போதும் பிடிப்பதில்லை/ அம்மாவுக்கு எழுத்தைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லை/ இப்படியான நிலையில் கவிஞராக இருப்பது ஒரு சாபமே போன்ற கவிதைகள் உள்ளன

ஆசிரியர் : இவள் பாரதி, முகவரி வெளியீடு, 6/25, பத்மாவதி நகர், இரண்டாவது குறுக்குத் தெரு, விருகம்பாக்கம், சென்னை 92