சந்தித்திருக்கிறீர்களா?

பிரதிபலன் பாராமல் பிறர் மீது அக்கறை காட்டும்  நல்ல மனிதர்கள் பற்றிய தொகுப்பு இது. புதிய தலைமுறை இதழில் இந்த  மனிதர்களைப் பற்றி பத்திரிகையாளர் எம்.பி.உதயசூரியன் எழுதியபோது இவர்கள் யாரும் தங்கள் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஊருக்கே உதவி செய்யும் ஓடும் பிள்ளை, மந்திரம்மூலம் குணப்படுத்தும் மந்திரி சாமி, பண உதவி செய்யும் சிறுவாடு லட்சுமி போன்ற பல அன்றாட அபூர்வ சாமானியர்களை விறுவிறுப்பான நடையில் நடமாட விட்டுள்ளார். வாசித்த பின்னும் மனதைவிட்டு அகல மறுக்கும் வெள்ளை இதயங்கள்.

ஆசிரியர் : எம்.பி. உதயசூரியன், வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ,என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 32