துளிவிஷம்

அவளைப் பார்த்தான். வசீகரமாயிருந்தாள். ஊதா நிற பளபளப்பு சிக்கன உடை, மெல்லிய மார்பு ஒட்டிச் சரிந்து.. வயிற்றில் நின்று மஞ்சள் நிற வயிறு காட்டி, தொப்புள் கடந்தவுடன் இடுப்பில் தொடர்ந்து முழங்காலுக்குச் சற்று மேலே முடிந்து மெல்லிய கால்களை விடுவித்தது இது எழுத்தாளர் ஆனந்த் ராகவின் துளிவிஷம் சிறுகதைத் தொகுப்பில் முகம் என்ற சிறுகதையில் ஒரு பெண்ணைப் பற்றிய விவரிப்பு. இப்படி செதுக்கிச் செதுக்கி எழுதுவதில் வல்லவராக இருக்கும் இவரது துள்ளலான மொழிநடை இத்தொகுப்பு முழுக்க விரவிக் கிடக்கிறது. முகம் சிறுகதை இறுதியில் தரும் அதிர்ச்சி அனுபவம் அதை ஒரு அற்புதமான சிறுகதை அனுபவம் ஆக்குகிறது. பல்வேறு ஊர்கள், நாடுகள், கலாச்சாரங்களின் பின்புலங்களில் அமைந்த 15 சிறுகதைகளின் தொகுப்பாக இது மலர்ந்துள்ளதுதிருமண நிகழ்ச்சிகளில் இசைநிகழ்ச்சி நடத்தி வந்தவர்கள் ஒருவருக்கொருவர் பசவிடாமல் அவதிப்படுத்துவதை மெல்லிசைக் கல்யாணம் என்ற கதை எள்ளலுடன் சித்தரிக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரனின் சரிவைச் சொல்லும் சுழல்பந்து, படித்த பின் மனதைப் பிசையும் துளிவிஷம் போன்ற கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆசிரியர் : ஆனந்த் ராகவ், வெளியீடு: வாதினி, 19/29, ராணி அண்ணா நகர், ஆஃப் பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர்,சென்னை - 78