கனவு ராட்டினம்

தூக்கமின்மை. நவீன வாழ்வு அதன் மனிதர்களுக்கு அளித்த பரிசு. கணந்தோறும் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் பிரச்சனையை அடித்தளமாகக்கொண்டது மாதவன் ஸ்ரீரங்கத்தின்  இந்த நாவல். இது இவரது முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கமின்மையால் அவதிப்படும் ஒருவனின் குழப்பங்கள் நிறைந்த  ஊசலாட்டங்களைத் தத்துவார்த்தப் பின்னணியில்  அலசுகிறது இந்நாவல். தூக்கமின்மையைக் களைய நாவலின் நாயகனான சுந்தர் கனவுக்குள் பயணிக்க வேண்டும் எனச் சொல்கிறார் ஒரு சித்தர்.

சித்தரின் சொல் பற்றித் தூக்கமின்மையைக் கடக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளும் அது ஏற்படுத்தும் உப விளைவுகளும் சரளமான மொழியில் சொல்லப்படுகிறது. கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையே ஊசலாடும் வாழ்க்கையையும் அதன் புதிர்த்தன்மையையும் நாவலில் எழுதப்பட்ட எல்லா வரிகளிலும் நாம் காண முடியும்.

ஒரே சமயத்தில் ஃபேண்டஸிக்கும், விஞ்ஞானப்புனைவிற்கும், நடைமுறைக்குமாக வாசிப்பவரை மாறிமாறிப் பயணிக்கவைக்கிறது இந்நாவல்.

ஆசிரியர் : மாதவன் ஸ்ரீரங்கம். வெளியீடு : யாவரும் பதிப்பகம்