மாணவர்களுக்கான தமிழ்

எழுத்தாளர் என்.சொக்கனின்  மாணவர்களுக்கான தமிழ் என்ற இந்நூல் நல்ல தமிழ் எழுத இனிய வழிகாட்டியாக உள்ளது.  வழக்கமாக தவறு நேரும்

சொற்களைச் சுட்டிக்காட்டி திருத்துவதுடன் நில்லாமல் தமிழின் இனிமை, அதன் சுவை, அதன் வரலாறு போன்றவற்றையும் அழகான சம்பவங்கள் மூலம் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்கிறார்

சொக்கன். திருக்குறள் அச்சிடப்பட்டது, ஆங்கிலேயரிடம் கம்பரைப் பற்றி மாணவர் சூரியநாராயண சாஸ்திரி எடுத்துச்சொல்லி விளங்க வைத்தது, முரசுக்கட்டிலில் உறங்கிய மோசிகீரனார், செம்மொழி என்பது ஏன்? உள்ளிட்ட ஏராளமான சுவையான தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகிறார். 100 கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கணத்தையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்க வைக்கும் அழகான நூல்.

ஆசிரியர் : என் சொக்கன்,  வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,  177/103, முதல் தளம்,  அம்பாள் கட்டடம்,  லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14