சுயமரியாதை ஒரு நூற்றாண்டின் சொல்

எனவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும்வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை இத்துடன் முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்’ - இப்படி நீதிமன்றத்தில் 1938 ஆண்டு இந்தி எதிர்ப்புக்காகக் கைது செய்யப்பட்டபோது முழங்கினார் பெரியார். இந்தத் துணிச்சல் தான் கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் வரலாற்றைத் தீர்மானித்தது என்பதை சுப.வீ எழுதி வெளியாகி இருக்கும் சுயமரியாதை- ஒரு நூற்றாண்டின் சொல் என்ற நூல் விவரிக்கிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கி பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள், அக்காலச் சமூகச் சூழல், அவருடன்  இணைந்தும் எதிர்த்தும் நின்றவர்கள், பொதுவுடைமை இயக்கத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இடையில் இருந்த உறவுச்சிக்கல் என்று பல்வேறு விஷயங்களை சுப.வீ தன் ஆழமான பார்வையில் விளக்குகிறார்.

ஆசிரியர் : சுப.வீரபாண்டியன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,  105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14