சிந்தனை மலர்கள்

இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும், தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் பேசும் மரபுக்கவிதைகள். சுற்றுச்சூழல் குறித்த மரபுக்கவிஞரின் அக்கறை கவனத்துக்குரியது.

ஆசிரியர் : கவிஞர் தாரை வடிவேலன், வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்.22/105, எண்:2, பாஸ்கர் காலனி 3வது தெரு, விருகம்பாக்கம், சென்னை-600092