வீழ்வதற்கல்ல வாழ்க்கை

வாழ்வியல் சிந்தனைகளை எளிமையான மொழியில் கூறி விளங்கவைப்பதில் லேனா தமிழ்வாணன் மிகவும் கெட்டிக்காரர். அவர் தினமலர் வாரமலரில் எழுதிய தொடரான வீழ்வதற்கல்ல வாழ்க்கை என்ற தொடர் அதே பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. மனைவி மற்றும் குடும்பத்தினரை பொது இடங்களில் எப்படி நடத்துவது, ஒவ்வொரு நாளையும் எப்படி பயனுறக் கழிப்பது உள்ளிட்ட 50 தலைப்புகளில் எளிமையாக சிறுசிறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றுமே அருமையான வாழ்வியல் பாடம். அவற்றில் சிலவற்றையாவது கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி கிடைக்கும். உதாரணத்துக்கு ஒன்று எதையும் ஆமோதித்து மறுப்பது என்பது.  எதையும் நேரடியாக மறுக்காமல், ‘இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது யோசித்துப்பாருங்க..’ ‘நீங்க சொல்றது சரிதான் இருந்தாலும் அதில் சில பாதகங்கள் இருக்கின்றன’ என்றெல்லாம் ஆமோதிப்பதுபோல் ஆரம்பித்து மறுப்பது சிறந்த கலை! விவாதத்தில் தேவையற்ற மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும்! இதுபோல் ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு பாடம்.

ஆசிரியர் : லேனா தமிழ்வாணன் எம்.ஏ., வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,  தபால் பெட்டி எண்: 1447 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை -17