கேஎஸ் ஆர் குறிப்புகள்

கதை சொல்லி காலாண்டு இதழில் பல்லாண்டுகளாக கேஎஸ் ஆர் குறிப்புகள் என்றபெயரில் வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் அதே பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளன. கேஎஸ் ஆர் தொட்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் அவரது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் அனுபவ அறிவையும் அவருக்கு இருக்கும் ஆர்வங்களையும் விளக்குகிறது. கோக் பெப்சி தடையிலிருந்து வைகுண்ட சாமி வரலாற்றிலிருந்து பள்ளிகொண்டபுரம் வரை எந்த தடையும் வைத்துக்கொல்லாமல் கோபுரத்தின் மீதிலிருந்து உலகைக்காண்பவர் போல் எழுதி இருக்கிறார். இந்த சுதந்தரமான பேசுபொருள்தான் இந்த நூலின் சிறப்பாகும். இவர் தொட்டிருக்கும் விஷயங்கள் குறிப்புகளாக மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றன. இந்த குறிப்புகளைப் பின் தொடர்ந்து விரிவாக வாசித்துக்கொள்ள வாசகனைத் தூண்டுகின்றன.

ஆசிரியர் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வெளியீடு :கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 600017