கருத்தில்லா கந்தசாமிகள்

பத்திரிகையாளர் ப்ரியன் அரசியல் செய்திகளை எழுதிய தன் நீண்ட அனுபவத்தைக் கொண்டு மின்னம்பலம் மொபைல் இதழில் எழுதிய அரசியல் கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. பெரியார் மணியம்மை திருமணம் பற்றிய செய்தியாக இருந்தாலும் சரி, பன்னீர் - சசிகலா மோதல் பற்றிய செய்தியாக இருந்தாலும் சரி, ப்ரியன் ஒருதலைப்பட்சமாக சாராமல் நின்று விளக்குகிறார். கருத்தில்லா கந்தசாமிகள் என்ற கட்டுரையில் டிவி விவாதங்களின் நிலைமை பற்றி நகைச்சுவையுடன் விளக்குகிறார். தமாகாவின் இன்றைய நிலையை மூப்பனாரின் காலத்துடன் ஒப்பிட்டு எழுதிய கட்டுரையும் முக்கியமானதாகும். அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் படித்துப் பார்க்கவேண்டிய கட்டுரைகள் கொண்டநூல்.

ஆசிரியர் : ப்ரியன்,  வெளியீடு: மின்னம்பலம் பதிப்பகம், அண்ணாமலை டிஜிட்டல் இந்தியா பி. லிட், 44,மூன்றாவது பிரதான சாலை,  கஸ்தூரிபா நகர், சென்னை - 20