ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்

வானேறிச் சென்றாலும்

பட்டம் அறியுமா

பறவையின் சுதந்தரம்?

- இந்த மூன்று வரியிலேயே பிருந்தா சாரதியின் கவிதை உலகம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எளிமையான நேரடியாகப் பேசும் கவிதைகள். எளிய சொற்கள் என்று புறந்தள்ளாமல் கூர்ந்து கவனித் தால் விரிந்து செல்லும் பட்டுத்துணி வருடிச்செல்வதுபோன்றதொரு உணர்வைத் தருபவை இவரது கவிதைகள். ஞாயிற்றுகிழமை பள்ளிக்கூடம் என்கிற கவிதை தருகின்ற சுகந்தமான உணர்வையே பிருந்தா சாரதியின் மற்ற கவிதைகளிலும் உணரமுடிகிறது. காதலை, தனிமையை, இயற்கையை மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கும் இந்த தொகுப்பு தன் வாசகனுடன் ஓர் அந்தரங்க உரையாடலை மென்மையாக மேற்கொள்கிறது. வைரமுத்து, நாசர், லிங்குசாமி, ரவிசுப்ரமணியன் ஆகியோரின் வாழ்த்துக்கட்டுரைகளும் இக்கவிதைகளுடன் நம்மை எளிதாக உறவாட வைக்கின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும்.

ஆசிரியர் : பிருந்தா சாரதி, வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கேகே நகர் மேற்கு, சென்னை 78