முனைவர் மு.இளங்கோவன்

சமீபத்தில் ஐம்பது வயதை எட்டினார் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞரான மு.இளங்கோவன்.  அதையொட்டி வெளியிடப்பட்ட நூலில் இளங்கோவனுடன் பழகிய உலகத்தமிழ் அறிஞர்கள் செயல்பாட்டாளர்கள் அனைவரும் கட்டுரைகள் எழுதி உள்ளனர். செம்மொழி இளம் அறிஞர் விருதைப் பெற்றவரான இவர் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இணையத்தமிழ், நாட்டுப்புறப் பாடல்கள் என இரு துறைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறவர், பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்கள் பற்றிய ஆய்வு,  பொன்னி இதழ் ஆசிரியவுரைகள், விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனாரின் வரலாற்று நூல் போன்றவற்றைப் பதிப்பித்தவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார், விபுலானந்த அடிகளார் ஆகியோர் பற்றிய ஆவணப்படங்கள், கண்ணுக்குத் தெரியாத பெரும் தமிழறிஞர்கள் பற்றித் தேடி இதழ்களில் எழுதுதல் என தேனீயைப் போலச் செயல்பட்டு வருகிறார் இளங்கோவன். அவரைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூலை சிவம் வேலுப்பிள்ளை தொகுத்துள்ளார்.

வெளியீடு: வயல்வெளிப்பதிப்பகம், இடைக்கட்டு உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட

சோழபுரம்(வழி), உடையார்பாளயம் வட்டம், அரியலூர் மாவட்டம் - 612 901