வள்ளல் திலகம் எம்.ஜி.ஆர்

வறுமையின் காரணமாக சின்ன வயதிலேயே பள்ளியில்  படிக்க முடியாமல் நாடகக் கம்பெனிக்கு அனுப்பட்ட ராமச்சந்திரன் என்ற அந்த பாலகன் பின்னாளில் தமிழக மக்களின் இதயமெல்லாம் நிறைந்திருக்கும் நாயகன் ஆவான் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்? வள்ளல் திலகம் எம்ஜிஆர்  என்கிற இந்த நூலில் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மிகச்சுவாரசியமான நடையில் எழுதி இருக்கிறார் வ. இளங்கோ.  19 வயது வரையுமான நாடக வாழ்க்கை அதன் பின்னர் பதினோரு ஆண்டுகள் திரைப்படங்களில் சிறு வேடங்கள்.. இவற்றுக்குப் பின் முப்பத்து மூன்றுவயதில் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் ஆகிறார். மிகக் கடினமான போராட்டத்துக்குப் பின்னால்தான் சினிமாத்துறையில் அவர் மேலே வருகிறார்.  இப்படி ஒவ்வொரு கட்டமாக எம்ஜிஆரின் வாழ்க்கையை விவரிக்கும் நூலாசிரியர், எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையையும் விரிவாக எழுதி இருக்கிறார். அவரது திரைப்படங்கள் பற்றிய முழு விவரங்களும் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன. புரட்சித்தலைவர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் பற்றிய முழுமையான நூல் இது!

ஆசிரியர் :  வ.இளங்கோ, கிளாசிக் பப்ளிகேஷன்ஸ், 12, பிரகாசம் சாலை, 2-வது ம் ஆடி, பிராட்வே, சென்னை -  108