
இருளை விரட்ட ஒளி எப்படி தேவையாக இருக்கிறதோ அதுபோல் மன இருண்மையை விரட்ட சுயமாக முயற்சி செய்யும் கவிஞனின் வெளிப்பாடாக அமைந்துள்ளன இந்த கவிதைகள். உக்கிரமான உணர்ச்சிகளும் அனுபவங்களும் தெறிக்கின்ற இக்கவிதை நூலில் சிறப்பான பல கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆவேசம் குறையாத இரவு என்ற கவிதையில் இருக்கும் ஆவேசம் மிகுந்த காதல் அழகாக வெளிப்படுகிறது.
என் வீட்டில் உன் அப்பா // நீ ஆளான செய்தியைச் சொன்னபோது
வானத்தில் நிலவில்லை - என்று தொடங்கும் இக்கவிதையில்
//இருள் அகலாத வெளிச்சத்தை // எனக்குள் எத்தனை முறைதான் ஏற்றுவார்கள் // என்கிற வரிகளில் மனசு நின்றுவிடுகிறது. ஆவேசமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படும் மனத்தின் வெளிப்பாடு இக்கவிதை நூலில் பல கவிதைகளில் அதன் வீரியம் குறையாமல் வெளிப்பட்டுள்ளது.
ஆசிரியர் :இளங்கவி அருண், வெளியீடு: முரண்களரி படைப்பகம், 34/25, வேதாசலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை - 68