உரையாடல் : மனிதம், சென்னை வெள்ளம்

தன்னுடைய தூரிகை மட்டுமல்லாது எழுத்துகள் மூலமும் தமிழ்ச்சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதில் பெரிதும் விருப்பம் உடையவர் ஓவியர் புகழேந்தி. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையைச் சூழ்ந்த வெள்ளம் பற்றிய சாட்சியமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார். வெள்ளப்பாதிப்பின்போது அவர் கண்ட காட்சிகள், அடைந்த சிரமங்கள், அப்போதிருந்த உணர்வுகள் ஆகியவற்றை எழுதி உள்ளார். பேரழிவின் போதான மனித உணர்வுகளும் நிகழ்வுகளும் பதிவாவது நாளைய வரலாற்றுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். புகழேந்தி தொடர்பாக வெளிவந்திருக்கும் இன்னொரு நூல் மனிதம் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அவரது நீண்ட நேர்காணலின் தொகுப்பு. பாலா இளம்பிறை தொகுத்திருக்கிறார். விஜயலட்சுமி,ஜீவகரிகாலன், அகரமுதல்வன், பாலா இளம்பிறை ஆகியோர் உரையாடி இந்த நேர்காணலை நிகழ்த்தி இருக்கிறார்கள். புகழேந்தி என்கிற ஓவிய, சமூக ஆளுமையின் பன்முக சித்திரத்தை இந்த நூல் வழங்கக்கூடியது. இவ்விரண்டு நூல்களுமே தூரிகை வெளியீடு.

வெளியீடு; தூரிகை, எஸ்பி 63, 3-வது தெரு,  முதல் செக்டார், கேகே நகர், சென்னை - 78.