
செல்போன் சரியில்லை என்று வழக்குத் தொடர்ந்து அம்பானியையே கைது செய்ய உத்தரவு வாங்கியிருக்கிறார் சாமானியர் ஒருவர். பேருந்துப் பயணத்தின் போது 12 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் பட, பத்தாயிரம் அபராதம் கட்ட வைத்தது நீதிமன்றம். வீட்டுக்கு வாங்கிப் போன டிவி சரியில்லை என்றதும் மன உளைச்சலுடன் டிவி ஷோ ரூமுக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஒருவர். ஷோ ரூம்காரர்கள் உடனே ஓடிவந்து புதிய டிவியைக் கொடுத்துச் சென்றனர். பொய்யான விளம்பரம் பார்த்து ஒரு பொருளை வாங்கினார் ஒருவர். தான் ஏமாந்ததை அறிந்ததும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்கு 10,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப் பட்டது.
இப்படி பல வெற்றிகரமான நுகர்வோர் வழக்குகளைப் பற்றிய விவரங்களைச் சுவாரசியமாகத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் இவள்பாரதி. புதிய தலைமுறை இதழில் தொடராக வெளியிடப்பட்ட இக்கட்டுரைகள் இக்காலகட்டத்தில் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதுடன் ஏமாற்றப்படுவோர் சரியான முறையில் வழக்குத் தொடர்ந்தால் அதற்குத் தீர்வும் உண்டு என்பதை உணர்த்துகின்றன. எந்தெந்த குறைபாடுகளுக்கு வழக்குத் தொடரலாம்? எப்படி வழக்குத் தொடர்வது என்பதற்கான ஆலோசனைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆசிரியர் : இவள் பாரதி, வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத் தாங்கல்,சென்னை32