தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் தொகுப்பு

தமிழர்கள் இன்று பல சமயங்களைச்சார்ந்தவர்களாக இருப்பினும் இன்றும் அவர்களின் பழக்கவழக்கங்களில் பௌத்த அடையாளங்கள் இருப்பது உண்மை. கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டுக்கு அறிமுகமான பௌத்தம் இங்கே பக்தி இயக்கம் வேரூன்றும் வரைக்கும் மிகப்பரவலான மதமாக இருந்தது. மணிமேகலை, குண்டலகேசி, வீர சோழியம் உள்ளிட்ட நூல்கள், திருக்குறள் உள்ளிட்ட நீதிநூல் கருத்துகள் என்று பௌத்தம் இன்னும் தொடர்கிறது. தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட பல்வேறு கட்டுரைகள் அதே பெயரில் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் பௌத்தக் கருத்துகள் இருப்பது பற்றி ஆயும் பல கட்டுரைகளும், பௌத்தமும் பிறசமயங்கள் பற்றி ஆயும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பௌத்த கலை, சிற்பங்கள் தமிழ் நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. பௌத்தம் இங்கே ஏற்படுத்திய தாக்கமும் அதன் தொடர்ச்சியும் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்யும் நூல் இது.

முனைவர் பிக்கு போதிபாலா,முனைவர் . ஜெயபாலன்,உபாசகர் .அன்பன் வெளியீடு: காவ்யா,

சென்னை 24.