வனசாட்சி

வறுமையில் இருந்த மக்களை வளமான வாழ்வு என்று ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களில் சிதைத்ததை விளக்கிய டேனியலின்  எரியும் பனிக்காடு நாவலைப் போன்று தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குச் சென்று உழன்ற மக்களின் சுமார் 200 ஆண்டு கதையைச் சொல்கிறது எழுத்தாளர் தமிழ்மகனின் வனசாட்சி. வட இலங்கையில் கரையிறங்கி வழியெங்கும் அவஸ்தைகளை அனுபவித்து, குற்றுயிராக முன்பின் அறிமுகமே இல்லாத ஹட்டன் தோட்டத்தைக் கால்நடையாக அடைகிறார்கள் தமிழர்கள். அங்கே லைன் வீடுகள் எனப்படும் வீடுகள், தேயிலைத் தோட்டத்து வாழ்க்கை. தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வுக்கும் பின்னர் சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தம் மூலமாக இடையூறு வருகிறது. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இருந்து தமிழகத்தின் நீலகிரித் தேயிலைத் தோட்டங்களுக்கு அவர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இடம் மட்டும்தான் மாறுதல். மற்றபடி எல்லாம் ஒன்றுதான். இலங்கையின் அரசியல், போராட்ட பின்னணியில் வரலாற்றைத் தொகுத்துக் கதை சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர் தமிழ்மகன். தேயிலைத் தோட்டத்திலிருந்து ஓடிவந்து புலிகள் இயக்கத்தில் சேரும் லட்சுமியின் கதைபோல் பல பாத்திரங்களின் கதைகள் நாவல் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக விரவிக் கிடக்கின்றன.

ஆசிரியர் : தமிழ்மகன், வெளியீடு :உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,சென்னை – 18 பேச