தூப்புக்காரி

சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்ததன் மூலம் கவனத்தைப் பெற்றிருக்கும் நாவல் மலர்வதி எழுதிய தூப்புக்காரி. பூமி மடியைச் சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்நாவல் துப்புரவுத் தொழிலாளர்களின் விளிம்புநிலை வாழ்க்கையைக் காத்திரமாகச் சொல்லிச் செல்கிறது.

மருத்துவமனையொன்றில் பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாகத் துப்புரவு வேலையைச் செய்ய நேரிடும் மேல் சாதியைச் சேர்ந்த கனகம், கனகத்தின் மகள் பூவரசி இருவருமே மைய கதாபாத்திரங்கள். மலம், மாதவிலக்கு இரத்தம், அழுகிய குப்பைகள் இவற்றோடு தினசரி வாழ்க்கையை நடத்தும் மனிதர்களையும் அவர்களை அழுக்குகளோடு அழுக்குகளாகப் பார்க்கும் சக மனிதர்களையும் பற்றிய கதைகளே இந்நாவல்.

ஆரம்பம், முடிவு என பழைய பாணியையே நாவலில் கடைபிடித்திருக்காமல் முதல் மற்றும் சில இறுதி அத்தியாயங்களைத் தவிர்த்திருக்கலாம். வட்டார வழக்கில் அச்சு அசலாக நாவல் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

  • ரீனா

வெளியீடு: அனலகம், தண்ணீர் பந்தல், பாலூர், கருங்கல் 629157

 

To Buy