உல்லாசத் திருமணம்

நிறத்தின் மொழி 

 

மொராக்கோவில் இருக்கும் பேஸ் நகர வணிகன் ஒருவனின் கதை இது. தொழில் தொடர்பாக செனகல் நாட்டுக்குச் செல்லும்போது அங்கே கருப்பினப் பெண் ஒருத்தியை மணந்துகொள்கிறான். அவளை தன் ஊருக்கு அழைத்துவருகிறான். அவனுக்கு ஏற்கெனவே இருக்கும் மனைவி, அவளுடன் ஏற்படும் பிரச்னைகள், புதிய மனைவியின் கருப்பு நிறம், அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிறம், அவர்களின் எதிர்காலம் என சுமார் 70 ஆண்டுகளின் கதையைச் சொல்கிறது இந்த நாவல். நிறத்தால் ஏற்படும் ஒடுக்குமுறைகளை முன்வைப்பதே இப்புதினத்தின் நோக்கம். மொரோக்கோவில் பிறந்த பிரெஞ்சு எழுத்தாளர் நஹர் பென் ஜெலூன், தம் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள், அநீதிகள், தீமைகள் குறித்து விவாதிக்கும் நூலாக இந்நாவலைப் படைத்துள்ளார். கடைசியில் அந்த வணிகனின் பேரன் நாட்டை விட்டு அகதியாக தப்பிச் செல்ல முயன்று எல்லையில் சுட்டுக்கொல்லப்படும் நிகழ்வுடன் கதை முடிகிறது. உலகெங்கும் நாடுகளின் எல்லைகளைக் கடந்து, தங்கள் மீதான புறக்கணிப்புகளில் இருந்து ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பி நல்ல வாழ்வைத் தேடிச் செல்லும் மக்களின் கதையையும் இந்நாவல் சுட்டுவதாகச் சொல்லலாம். ப்ரெஞ்சிலிருந்து தமிழில் சு.ஆ. வெங்கட சுப்பராய நாயகர் மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கும் இந்நூல் விறுவிறுப்பான வாசிப்புக்கு உகந்தது.

 

 தஹர் பென் ஜெலூன். தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்பராய நாயகர்

வெளியீடு: தடாகம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை,  திருவான்மியூர், சென்னை - 600041 

பேச: 9840070870, விலை ரூ 300