இருட்டின் நிறமும் பகலின் ஒளியும்

கவியின் ஆளுமை

 

கவிஞர் விக்ரமாதித்யனின் நேர்காணல்களும் இன்னும் சில செய்திகளும்    சேர்ந்து நக்கீரன் பதிப்பகத்தால் இருட்டின் நிறமும் பகலின் ஒளியும் என்று    நூலாக வடிவம் பெற்றிருக்கிறது. கவிஞரிடம் ஏராளமானவர்கள் எடுத்திருக்கும் நேர்காணல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சொற்களால் நிரம்பிய         விக்ரமாதித்யனிடம் பல விஷயங்கள் பற்றிக்கூறுவதற்கு ஏராளமாக இருக்கிறது என்பது இந்த கட்டுரைகள் மூலம் புலனாகிறது. கவிஞரின் சொந்த            வாழ்க்கை, சென்னையில் பல வேலைகள் பார்த்தது, தன் சினிமா அனுபவங்கள், கவி அனுபவங்கள், குடி அனுபவங்கள், வாசகர்களுடனான உறவுகள்,           சம கால கவிஞர்கள் பற்றிய பார்வை, கவிதை குறித்த விமர்சன மதிப்பீடு என ஏராளமாக இந்நூலில் பதிவாகி உள்ளது. தனக்குப் பிடித்த கவிஞர் கண்ணதாசன் என்று பெரும்பாலான நேர்காணல்களில் குறிப்பிடுகிற இவர், அவரை          இரண்டு முறை சந்தித்து பேட்டி எடுத்திருக்கும் சம்பவங்களையும் குறிப்பிடுகிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் ஆண்டாளையும் வெள்ளிவீதியாரையும் இப்போதைய பெண் கவிகள் எட்டவே இயலாது என்று ஆவேசப்படுகிறார் இன்னொரு இடத்தில் பாலுமகேந்திராவிடம் இருந்து அவர் தன்னை எடுத்த புகைப்படத்தை பெற முடியவில்லையே என ஆதங்கப்படுகிறார். வேறொரு சமீபத்திய பேட்டியில் எல்லா பெண் கவிகளுக்கும் தகப்பன் ஸ்தானத்தில் இருப்பதாக கனிகிறார். இந்நூலில் இருக்கும் நேர்காணல்களிலும் குறிப்புகளிலும் வெளிப்படுவது விக்ரமாதித்யனின் ஆளுமை.

 

விக்ரமாதித்யன், 

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான்

சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600014

பேச: 044- 43993029 விலை : ரூ110