பேனாவின் கைப்பிடித்து, ஒரு இதழாளனின் நினைவுக் குறிப்பிலிருந்து

எழுத்தின் வழியில் 

 

வேலை விஷயமாக ஓர் வீட்டுக்குச் செல்கிறீர்கள்.. எங்கும் சாப்பாட்டுக் கடை இல்லை.. பசியில் துடிக்கிறீர்கள். அந்த வீட்டிலோ ஒரு சிறு பெண் மட்டும் இருக்கிறாள்.. பெரியவர்கள் இல்லை. அங்கே காத்திருக்கிறீர்கள் பசியுடன். நீங்கள் கேட்காமலேயே அந்தப் பெண் உங்கள் முகமறிந்து அமரவைத்து உப்புமா கிண்டிப்போடுகிறாள்.. அவளைப் பார்த்தால் தெய்வமாகத் தோன்றுமா இல்லையா? பத்திரிகையாளர் சோமு அந்த கிராமத்துக்குப் போனதோ ஒரு கோவில் பற்றிக் கட்டுரை எழுத. 

இந்த நூலில் தனக்குச் சோறுபோட்ட அந்த சிறுபெண்ணைப் பற்றி 

எழுதி தன் நன்றிக்கடனைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார். 

நெகிழ்வான இந்த மனிதர் தன் பத்திரிகை வாழ்வில்  ஏராளமான சர்ச்சை செய்திக்கட்டுரைகள் எழுதியவர். 

பிச்சைக் காரர்களுடன் அலைந்தது, செத்துப்போனவரின் சாதகத்தைக் கொண்டுபோய் சோதிடர்களிடம் காண்பித்து பலன் கேட்டது, குரங்கை ஓவியம் வரையவைத்து நவீன ஓவியர்களிடம் காண்பித்து அர்த்தம் கேட்டது, வைகோ கொடுக்காத பேட்டி என எழுதியது, ராமகோபாலனிடம் அர்ச்சனை வாங்கியது என பல அனுபவங்கள் குறித்து இந்த நூலில் எழுதி இருக்கிறார். அவர் தன் தந்தையுடனான சின்ன உரசல் பற்றியும் இதில் எழுதி இருக்கிறார். படித்தால் கண்கள் குளமாகிவிடும். தன் தாய் பற்றியும் பள்ளி ஆசிரியர் பற்றியும் அவர் எழுதி இருக்கும் நினைவுகளும் இதே ரகம்தான்.  வாசிக்க எளிமையான நடை சிறப்பு.

டிவிஎஸ் சோமு, இனியா பதிப்பகம், 

சி-4, ஸீபுலான் அபார்ட்மெண்ட்ஸ், 156, பாலாஜி தெரு,சீனிவாச நகர், மடிப்பாக்கம், சென்னை-91

பேச: 73583 49617 விலை: ரூ 160