கம்பனின்அம்பறாத்தூணி

கம்பனைப்புதிதாகக்கற்கஆர்வமுள்ளதீவிரஇலக்கியவாசகர்கள், இளம்படைப்பாளிகள், தன்எழுத்துக்களுடன்ஏற்கெனவேஉறவுடையவர்கள்என்றுதன்இலக்காகயாரைஇந்நூலுக்குநிர்ணயித்திருக்கிறேன்என்றுசொல்லிவிட்டுகம்பனின்எடுக்கஎடுக்கக்குறையாதசொல்அம்பறாத்தூணியில்இருந்துஒவ்வொருசொல்லாகஎடுத்துகளமாடுகிறார்நாஞ்சில்நாடன். தான்கம்பனின்அடிப்பொடியாகஉருவானதுஎப்படிஎன்பதையும்திரு.ரா.பத்மநாபன்அவர்களிடம்மும்பையில்கம்பனைக்கற்றதையும்முதல்அத்தியாயத்தில்விளக்கிவிடுகிறார்.  தமிழின்மிகப்பெரியகாப்பியமானகம்பராமாயணத்தில்உள்ளபாடல்கள்எண்ணிக்கை 10,368. திரும்பத்திரும்பப்பயன்படுத்தியசொற்களைக்கழித்துப்பார்த்தால்கம்பன்மொத்தம்ஒன்றரைலட்சம்சொற்களைப்பயன்படுத்தியிருக்கக்கூடும். சென்னைப்பல்கலைக்கழகலெக்சிகன்(1927) பட்டியலிட்டதமிழ்ச்சொற்கள் 1,24,000. எனில்கம்பன்லெக்சிகனுக்குள்அடங்கிஆடுகிறானா? ஏகவெளியில்தாண்டவம்புரிகிறானா? என்றுவியந்துகேட்கிறார்நாஞ்சிலார்.

இன்றுஉறக்கம்என்பதற்குதூக்கம்என்றுபொருள்கொள்கிறோம். ஆனால்கம்பனில்உறக்கம்மட்டுமே. தூக்கம்இல்லை. எங்கெல்லாம்கம்பன்உறக்கம்என்கிறசொற்களைப்பயன்படுத்துகிறார்என்றுதேடித்தொகுக்கும்நூலாசிரியர், கூடவேதிருக்குறள், மற்றும்சங்கநூல்களிலும்உறக்கம்என்றசொல்எப்படிப்பயன்படுத்தப்பட்டுள்ளதுஎன்பதையும்ஆராய்கிறார். தூக்கம்என்றால்தொங்குதல்அல்லதுகாலநீட்டித்தல்என்றுதான்பொருள். ஆனால்இன்றுவழக்கில்உறக்கம்என்பதற்குப்பதிலாகதூக்கம்என்றுபயன்படுத்துகிறோம். ஆனால்மலையாளத்தில்பழந்தமிழ்ச்சொல்லானஉறக்கம்இன்றும்பயன்பாட்டில்உள்ளதுஎன்கிறார். இன்று "மஷ்ரூம்' என்றுபுழக்கத்தில்இருக்கும்காளான், பழந்தமிழில்புறநானூற்றில், கம்பனிடத்தில்ஆம்பிஎன்றபெயரில்புழங்குகிறது. இப்படிசொல்மேல்சொல்லைகம்பனில்தேடிசங்கஇலக்கியத்தில்அதற்குத்துணைதேடிமிகசுவாரசியமாகஓர்நூலைப்படைத்துள்ளார்நாஞ்சில்நாடன். தமிழ்ச்சுவைபருகப்பருகத்தீராது. 

ஆசிரியர்; நாஞ்சில்நாடன்,வெளியீடு : உமாபதிப்பகம், 171,(புதியஎண் 18), பவளக்காரத்தெரு, மண்ணடி, சென்னை600001