சென்னை அறிந்த இடம் அறியாத விஷயம்

அலைந்து திரிபவனின் நகரம்

 சென்னையில் அன்றாடம் செல்லும் இடங்கள்தான். ஆனால் அவற்றைப் பற்றிய முன்னணி மற்றும் பின்னணியில் இருக்கும் அரிய தகவல்களைத் திரட்டி பத்திரிகையாளர் பேராச்சி கண்ணன் எழுதி இருக்கும் நூல் இது. சென்னையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் புழங்கும் ரிச்சி ஸ்ட்ரீட் தொடங்கி, பாரிஸில் உள்ள பஜார்கள் வரை ஐம்பது இடங்களில்  புகைப்படக் கலைஞருடன் சுற்றித் திரிந்து எழுதி இருக்கிறார். ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போகிறோம். யார்யா இந்த ரிச்சி? அவ்ளோ பெரிய ஆளா? அவர் பேர்ல இங்க ஒரு சந்தையா என்று யோசித்திருக்கிறோமா? 

சவுகார்பேட்டையில் இருப்பவர்கள் எங்கிருந்து வந்தனர்? எப்போது வந்தனர்? இவங்களுக்கு எல்லாம் சேட்டு என்று எப்படிப் பெயர் வந்தது? எல்லா கேள்விகளுக்கும் இந்த நூலில் விடை இருக்கிறது.

சென்னையின் பரப்பான விற்பனை நிலையங்களில் கடைத்தெருக்களில் எல்லாம் ஆட்களை சந்தித்து தகவல்களை சுவாரசியமாகத் திரட்டியதுடன்

சற்று வெளியே முதலைப்பண்ணை, ஓவியர் கிராமம், பழவேற்காடு, பல்லாவரம் சந்தை என்றும் அலைந்து திரிந்திருக்கிறார் நூலாசிரியர். இவருடன் இணையாகவே புகைப்படக்காரர் ஆ.வின்செண்ட் பாலின் காமிராவும்

சென்றுள்ளது. நூல் முழுக்க பிரமாண்டமாக புகைப்படங்களையும் இணைத்துள்ளனர். பேராச்சி கண்ணனின்  வழுக்கும் எளிமையான எழுத்து நடையின் வாயிலாக சென்னையின் அசலான முகத்தை இந்நூலில் தரிசிக்கலாம்.

பேராச்சி கண்ணன், சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004, விலை: ரூ 320