சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்

பொதுவாகவே கவிமனம் என்பது பித்தால் நிறைந்தது. எனவேதான் ஒழுங்கின்மீது பிடிமானம்  கொண்டவர்களால் பெரும்பாலும் சிறந்த கவிகள் ஆகமுடிவதில்லை. பிரான்சிஸ்

கிருபாவின் உள்ளம் பித்தால் நிறைந்தது. அவரது கவிதைகளும் அப்படியே. எல்லா ஒழுங்குகளையும் மீறியவை.  இந்த வரியை இங்கே வெட்டிவிடலாம், இங்கே நிறுத்தலாம் என்கிற ஒழுங்குகளுக்குள் வரவேண்டும் என்ற பிரக்ஞையை மீறி எழுதப்படுகிறவை. காட்டாறு போன்ற நவீன கவிதைப் பிரவாகம். நவீன வாழ்வோடு ஒத்திசைய முடியாமல் தத்தளிக்கும் மனதுதான் அவரது கவிதைகளில் பீறிடுகிறது.

எது வேண்டும்/

எடுத்துக்கொள் என்றான்/

ஒன்றும் புரியாமல்/

ரெண்டும் வேண்டாமென்றேன்/

வியர்வை துடைத்துக்கொண்டது/

வெளியில் வெயில்.

------------------

ஆமென்

பசியை சமைத்தபடி

பன்னெடுங்காலமாக

பட்டினி கிடப்பவன்

வீட்டுக்கு

விருந்துக்கு செல்லாதோர்

பேறு பெற்றோர்

------------இதுபோன்ற ஏராளமான வரிகள். ஒற்றைச் சிறகு கொண்ட பச்சைப்பறவை, பச்சை வண்ணத்தில் நிறை நிலவு, குட்டிப் புயல் குஞ்சுகள் போன்ற பளீரிடும் சொற்களுக்காகவும் இந்த கவிதைத் தொகுப்பில் ஆழ்ந்துபோகலாம்.

 

ஜெ.பிரான்சிஸ் கிருபா, படிகம் பதிப்பகம், 4/184, தெற்கு தெரு,  மடத்தட்டு விளை, வில்லுக்குறிச்சி, கன்னியாகுமரி 6291280 பேச: 9840848681

விலை: ரூ 150