ரசவாதி, பாலோ கொயலோ

கனவுப் பாதை

உன்னுடைய கனவுகளை பின் தொடர்ந்து செல், அதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்று

சொல்லும் ரசவாதி, எந்த நிலையிலும் கனவுகளை கைவிடாதே என்கிறது. இதயம் சொல்வதை கேட்டு பயணிக்கும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் துணை நிற்கும், வழி நடத்தும் என்பதை ரசவாதி உணர்த்துகிறது.

தமிழில் சரளமான நடையில் மொழிபெயர்த்திருக்கும் நாகலட்சுமி சண்முகம் இதற்காக எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. பாவ்லொ கொய்லோவின் வாசகர்களின் விவாதங்களை மொழி பெயர்ப்பாளர் தேடி சில முக்கியமான சொற்களை எளிமையாகவும் அதன் அர்த்தம் மாறாமலும் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில்: நாகலட்சுமிசண்முகம், மஞ்சுள் பதிப்பகம், போபால்.