மண்மூடிப் போகும் மாண்புகள்

ஒளியூட்டும் எழுத்து

 சமூக சீர்கேடுகளை, தனி மனிதர், பெண்கள், குழந்தைகளின் உரிமைகளை அழுத்தமாகவும் விளக்கமாகவும் கூறும் கட்டுரைகளை எழுதி வருபவர் சமூக பத்திரிகையாளரான

ப. திருமலை. இவரது 26 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டு வெளியாகி உள்ளன. வேலை இல்லாத் திண்டாட்டம், மதுப்பிரச்னை, கழிவறை பிரச்னை, கைதிகளின் உரிமைகள் என எதுவும் திருமலையின் பார்வைக்குத் தப்புவதில்லை. விளிம்பு நிலையில் வாழ்வோர் குறித்து சட்டரீதியான பார்வையுடனும் கரிசனத்துடனும் எழுதப்பட்ட கட்டுரைகளும் நூலில் உள்ளன. கவிதை உறவு வழங்கும் பரிசு பெற்றது இந்நூல்

மண்மூடிப் போகும் மாண்புகள், ப.திருமலை, வெளியீடு: பாவைமதி, 55, வ.உ.சி நகர், மார்கெட் தெரு, தண்டையார்பேட்டை, செனை 81