
குறும்பா:
தச்சன் நாகராஜனின் முதல் ஹைகூ கவிதை நூல் இது. அழகான துளிப்பாக்களைத் தாங்கி சிறந்த வடிவமைப்பில் வந்திருக்கும் இச்சிறிய நூலில் பரந்த உலகை அடக்கி இருக்கிறார் நாகராஜன்.
இதயக்குளம்
கல்லெறியாமலே சலனப்பட்டது
பால்ய நினைவுகள்
--------------------
பளிச்செனத் தெரிகிறது
விலாவில்
வறுமைக்கோடு
--------------------
வானம்
அருகில்தான்
பறவைகள்
-இதுபோன்ற கவிதைகள் அடங்கிய தொகுப்பு. சமூக அக்கறையும் இயற்கைமீதான அவதானிப்பும் கொண்ட வரிகள்.
நீரில் நிழலாய் மரம், தச்சன் நாகராஜன்
தச்சன் வெளியீடு,
430, டி.என்.எச்.பி, 4-வது பிளாக்,
முகப்பேர் மேற்கு, சென்னை-37