புறச்சூழல்

சூழலும் பார்வையும்

 தேர்ந்த கானுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான முகமது அலி எழுதி இருக்கும் நூல். முகமது அலி இன்றைக்கு இருக்கும் பலரின் இயற்கை சார்ந்த நோக்கைச்

சாடுகிறவர். எந்த ஜென்மத்திலும் ஏழை எளிய நடுத்தர, தலித் மக்களுக்கு இயற்கையை அறிவியலாக அனுபவிக்கும் மார்க்கமே இல்லை என்றெண்ணும்படியாக நம் நாட்டு நடப்புகள் கட்டப்பட்டுவிட்டன என்கிறார் அவர். இயற்கையில் காணக்கிடக்கும் பல விஷயங்கள் பற்றி 281 தலைப்புகளில் சிறுசிறுகுறிப்புகளாக எழுதி இந்நூலில் தொகுத்துள்ளார். கரடி, ஆமை, சாரைப்பாம்பு, பல்வேறு பறவைகள் என புதிய புதிய விஷயங்கள் புதிய கோணத்தில் வெளிப்படும் தன்மைகளுடனான செய்திகள் இவை. வெறும் தகவல் தொகுப்பாக இல்லாமல் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வைகளுடனான தொகுப்பு இது.

புறச்சூழல், ச.முகமது அலி, வேலா வெளியீட்டகம், 29, பாரதிநகர், கோவைப்புதூர், கோயம்புத்தூர்- 42