நேற்று இன்று நாளை

பள்ளி 75

 தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேனிலைப்பள்ளியின் பவளவிழாவை முன்னிட்டு அப்பள்ளியில் படித்த மாணவர்களில் கலை இலக்கியத்துறையில் சிறந்து விளங்கும் முன்னாள் இந்நாள் மாணவர்களை பற்றிய குறிப்புகளைத் திரட்டி நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இதழியலாளர் கயல் தினகரன், முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாக உள்ளனர். இவர்களை நினைவு கூர்வது மட்டுமன்றி தற்போதைய நம்பிக்கை

நட்சத்திரங்களைப் பற்றிய குறிப்புகளையும் இந்நூலில் இடம்பெறச் செய்துள்ளனர். படித்த பள்ளியைப் பற்றி மாணவர்கள்தான் நினைவுகூர்வர். இங்கு தன் மாணவர்களைப் பற்றி பள்ளி நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறது.

நேற்று இன்று நாளை (தே பிரித்தோ கலை இலக்கிய பவளங்கள்- 75) இதயவளனரசு சே.ச., ம. ஸ்டீபன் மிக்கேல்ராஜ்,வெளியீடு: முன்னாள் மாணவர் மன்றம், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், தே பிரித்தோ மேனிலைப்பள்ளி, தேவக்கோட்டை