வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தமே வேண்டாம்! வாசிக்கலாம்!

 சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் அட்டகாசமாக ஓடி பட்டையை கிளப்பியது ஞாபகம் இருக்கலாம். இயக்குநர் ராஜேஷின் உதவியாளராக இருந்த பொன்ராம் இயக்கிய படம் அது. அந்த படத்தை இப்போது காமிக்ஸ் வடிவில் நூலாக்கி இருக்கிறார்கள். ஓவியர் சந்திரனின் கைவண்ணத்தில் படத்தின் காட்சிகள் அனைத்தும் கோடுகள் ஆகி உள்ளன. போஸ் பாண்டி, சிவனாண்டி, லதா பாண்டி, கோடி ஆகிய பாத்திரங்கள் வண்ணக்கோடுகளாகி இருக்கின்றன. படத்தில் வரும் அதே வசனங்களைத்தான் இங்கும் அச்சிட்டுள்ளனர். காமிக்ஸ் நூல்களுக்கே உரிய  காட்சிக் கோணங்களில் அந்த படம் நம் கையில் நூல் வடிவில் இருப்பது ஓர் ஆச்சரியம். பொதுவாக நூல்களைத்தான் படம் ஆக்குவார்கள். இங்கே அது பின்னோக்கி நடந்துள்ளது. தியேட்டர்களில் குழந்தைகள், சிறுவர்கள் கொண்டாடும் நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார். அந்த ரசிகர்களுக்காக இந்த புத்தகத்தை உருவாக்கி இருப்பதாக இயக்குநர் பொன் ராம் கூறுகிறார். இளைய தலைமுறையை வாசிக்கவைக்கும் முயற்சி எப்படி நடந்தாலும் வரவேற்கலாம்தானே?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், பொன்ராம்,

நவீனா பதிப்பகம், எண் 985, எஸ்பி ப்ரைம் ரோஸ், 24வது தெரு, ஹெச் ப்ளாக், அண்ணா நகர் மேற்கு, சென்னை 600040