புத்திக் கொள்முதல்

அன்றாட வாழ்க்கை:

 சக மனிதர்களின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை அழகாக தமக்கே உரிய பார்வையில் சிறுகதைகளாக ஆக்கியிருக்கிறார் ஜனநேசன். கொள்ளை என்ற சிறுகதையில் வீட்டில் நகைகளைக் கொள்ளை கொடுத்துவிட்டு ஒரு குடும்பம் படும் பாட்டைச் சொல்கிறார். மீட்கப்படுவது நகை அல்ல. அது உருக்கப்பட்ட தங்க உருண்டை. நகையைப் பறிகொடுத்தவர் அதை என் நகை அல்ல. இந்த உருண்டையை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.. என்று திரும்பி நடக்கிறார்.  புத்திக்கொள்முதல்

சிறுகதையும் பங்குவர்த்தகத்தில் முதலை இழக்கும் ஒருவரின் கதை. மிகவும் நெகிழ்வான திருப்பங்களுடன் முடிகிறது. பட்டறிவு என்ற

சிறுகதையும் இந்து முஸ்லிம் உறவை உயர்வான தளத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. மானுட உறவுகளின் உச்சத்தைக் கனவுகாணும்

சிறுகதைகள் இவை.

 

ஆசிரியர்: ஜனநேசன், பாரதிபுத்தகாலயம்,7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018