பாண்டித்துரை

போரும் மனிதர்களும்

நல்ல திரைப்படத்துக்கானது  போல எழுதப்பட்டிருக்கிறது இந்த கதை. வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஆரம்பிக்கும் இக்கதை சமகாலத்தில் லண்டனில் முடிவடைகிறதுதமிழகத்தில் பிறக்கும் பாண்டித்துரை, பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்தில்

சேர்ந்து முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டு சாகசங்கள் செய்து லண்டனில் உளவாளி என பொய்க்குற்றம்

சாட்டப்பட்டு இறந்துபோகிறான். அந்த யுத்தத்தின் போது ரோவர் என்கிற வெள்ளை அதிகாரிக்கும் பாண்டித்துரைக்கும் மலர்ந்த உறவு, பின்னாளில் அவர்களின் வாரிசுகளிடையே திருமண பந்தமாக முடிகிறது. முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் அதில் கலந்துகொண்ட இந்தியர்களைப் பற்றிய எழுத்துகள், பதிவுகள் குறைவே. ஐரோப்பிய மண்ணில் தங்களுக்கு அந்நியமான நிலத்தில் அந்நியர்களுக்காக போரிட்டு இறந்தவர்களை நினைவூட்டும் கதை இது.

ஆசிரியர்: எஸ். பிரபாகரன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை -600024