சகலகலா வல்லபன்

வழிகாட்டும் நினைவுகள்

மீன் கொடித்தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் - என்று தொடங்கும் பாட்டைக் கேட்டதும் ஞாபகத்துக்கு வரவேண்டிய பெயர் எம்.ஜி.வல்லபன். திரைப்பத்திரிகையாளரான இவர் பிலிமாலாயா, ஹெல்த் போன்ற பிரபலமான பத்திரிகைகளை நடத்தியவர். பல படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். இயக்குநரும்கூட.இவர்மூலமாக பத்திரிகையுலகுக்கு வந்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் ஒருவரான அருள் செல்வன்,

இவர் பற்றிய பலரது ஞாபகங்களைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கி உள்ளார். நடிகர்

சிவகுமார், பாரதிராஜா, ஆர்.செல்வராஜ், சத்யராஜ், பொன்வண்ணன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் பல பத்திரிகையாளர்களும் வல்லபன் பற்றிய தங்கள் ஞாபகங்களை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்துள்ளனர். முதல் சந்திப்பிலேயே பலரை அவர் பணியில் சேர்த்துக் கொண்டுள்ளார். இந்த அனுபவங்கள்மூலம் திறமையை எடைபோடும் இவரது தனித்திறன் புரிகிறது.

 

ஆசிரியர்: அருள்செல்வன்,  தமிழ்வெளி, எண்.1, பாரதிதாசன் தெரு, சீனிவாச நகர், சென்னை600 122