வைதீஸ்வரன் கதைகள்:

நினைவுகளின் சாளரம்:

கவிஞராக அறிந்திருக்கும் எஸ்.வைதீஸ்வரனை சிறுகதையாசிரியராகவும் அறிய வைக்கும் தொகுப்பாக இருக்கிறது கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அவரது சிறுகதை நூல். கிட்டத்தட்ட எல்லா கதைகளுக்குமான ஆதாரங்களை வாழ்வின் அனுபவங்களில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார் வைதீஸ்வரன்ஒரு ஜன்னல் வழியாக கடந்த காலத்தைப் பார்த்துவிடுகிற அபூர்வ அனுபவத்தை இதில் இருக்கும் பல கதைகள் தருகின்றன. ஹரிதாஸ் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் குடும்பத்தைப் பாட்டி குளித்துவிட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்று வற்புறுத்துவதைச் சொல்லும் கதை இதற்கொரு உதாரணம். இன்றைக்கு பார்க்கின்ற நிஜத்துக்கும் என்றோ நிகழ்ந்து மறைந்த நிஜத்துக்கும் ஏதோ ஒரு பாலம் இருக்கிறது என்கிறார் வைதீஸ்வரன். இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகள் நினைவுகளாக அமைந்திருக்கின்றன.

 

 ஆசிரியர்: எஸ்.வைதீஸ்வரன், கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் 6123, 8, மாசிலாஅமணி தெரு,  பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600017