நூலகத்தால் உயர்ந்தேன்

நினைவலைகள்:

ஆலந்தூர் கோ மோகனரங்கன் எழுதி வசந்தா பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  தன் வரலாறு நூலான இதில் 1096 பக்கங்கள் உள்ளன. கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலான தமிழக கவியரங்கங்களின் வரலாற்றை யாராவது ஆராய வேண்டுமென நினைத் தால் இந்த நூலைத் தவிர்க்கவே முடியாது. அரசியல்வாதிகள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் என 2500 பேர்களுடன் பழகிய அனுபவங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறார் மோகனரங்கன்.   பெருவாழ்வு வாழ்ந்திருக்கும் இவரது தனிச்சிறப்பு எல்லோருடனும் நட்பு பாராட்டி வாழ்வைக் கொண்டாட்டமாகக் கொண்டு செல்வது என்பதை இதை வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும். சிறுவயதிலேயே நூல்களைப் படிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்திருக்கிறார். அவர் மேடையிலே சிறு மாணவனாகப் பேசியபோது இந்த படிப்பறிவின் காரணமாக அவரே சொந்தமாக உரை தயாரித்துப் பேசினேன் என்று கூறியதை நடுவர்கள் ஏற்றுக்கொள்ளாததும் நடந்திருக்கிற்து. நூல்கள் ஆலந்தூரில் யார் யார் வீட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் தேடிப்போய் வாங்கிப் படித்துள்ளார்பத்தாம் வகுப்பின்போது பள்ளிக்குச் செல்லாமல் பத்து நாட்கள் டிமிக்கி கொடுத்த இவர் தன் அப்பா, விஷயத்தைக் கண்டு பிடித்ததும் வீட்டை விட்டு ரயிலேறி மதுரைக்கு வந்து விடுகிறார். அங்கே நான்கைந்து நாட்கள் சுற்றிவிட்டு கையிலே காசு இல்லாதா நிலையில் பெரும்பாடு பட்டு ரயிலேறி சென்னைக்கு திரும்பி வருகிறார். இவரை ஒரு ரயில்வே அதிகாரி திரும்பத் திரும்ப ரயிலில் டிக்கெட் இல்லாமல் பிடித்து இறக்கி விட்டுக்கொண்டே இருக்கிறார். இதுபோல் வீட்டை விட்டு ஓடிப்போகும் அனுபவம் பலருக்கும் இருக்கலாம்.

 

ஆசிரியர் : ஆலந்தூர் கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம்,  26, குறுக்குத் தெரு,  சோசப்புக் குடியிருப்பு, ஆதம்பாக்கம்,  சென்னை-88