சாஅய்

கவனம் கோரும் கவிதை

கோ.சாமானியன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு சாஅய். பட்டினியில் இருக்கும் மனிதனுக்கு கடவுள் மேல் எழும் தார்மீகக் கோபம், கணேஷ் பீடியும் கடன் தொல்லையுமாய் தெருக்கூத்தில் ராஜா வேஷம் கட்டும் கலைஞனின் வறுமை, தமிழர்களை சக அடிமைகள் என விளிக்கும் அறச் சீற்றம் என ஆரம்பநிலைக் கவிஞர்களின் முதல் தொகுப்பில் இருக்கும் சமூகக் கோபமும் அதே அளவிலான சமூக அக்கறையும் நிறைந்த தொகுப்புதான் இது. முதல் தொகுப்பிலேயே கவனம் ஈர்க்கும் கவிஞராக இருப்பதால் பாராட்டுக்கள்!

சாஅய், சாமானியன், சந்தியா பதிப்பகம், 77, 53-வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83