பழைய யானைக் கடை

கவிதை விளையாட்டு

அதிகமும் அறியப்படாத புத்தகங்களின் மீதும் செய்யுட்களின் மீதும் செய்யுட்களில் தொழிற்படும் விளையாட்டின் மீதும் வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியே கவிஞர் இசையின் இந்த நூல். தமிழில் எழுதப்படும் பகடிக் கவிதைகள் பற்றிய கட்டுரையும் உண்டு. கவிதையில் விளையாட்டு எப்படி தொழிற்படுகிறது என்பதை நுணுகி ஆராய்கிறார் அவர். ஞானக்கூத்தன், தேவ தேவன், தொடங்கி மனுஷ்யபுத்திரனின் “பேன்’ கவிதையை விளையாட்டாக இல்லாமல் தீவிரத்துடன் அலசுகிறார்.  இதைப்போலவே தமிழின் பழம் இலக்கியப்பாக்கள், தனிப்பாடல்கள், தொடங்கி பாரதி மற்றும் நவீன கவிஞர்கள்  சி.மணி, யுவன் சந்திரசேகர், நரன், லிபி ஆரண்யா, முகுந்த் நாகராஜன், இளங்கோ கிருஷ்ணன், வெய்யில், கண்டராதித்தன், போகன் சங்கர், சபரிநாதன்  என நீளும் கவிஞர்களின் கவிதைகளில் பகடி எப்படி நிகழ்ந்துள்ளது, அது கவிதைகளை எங்ஙனம் பாதித்துள்ளது என்பதையும்  தீவிரமாக ஆராய்கிறது இந்த நூல். ஒரு நவீன கவிஞனின் கவிதை குறித்த மாற்றுக்கோணப் பார்வை நூல் இது.  தலைப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை!

பழைய யானைக் கடை - இசை,

காலச்சுவடு பதிப்பகம்,669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001