மைக்ரோ பதிவுகள்

கீச்சுகள்

எழுதி எழுதி என்னை அடைகிறேன் என அறைகூவல் விடுக்கும் ராஜா சந்திரசேகரின் டிவிட்டர் பதிவுகளின் பெருந்தொகுப்பு இந்தப்புத்தகம். ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லிவிட வேண்டும். அது விடுக்கும் சவாலே அதன் வசீகரம். அந்த வசீகரம் இந்தத்தொகுப்பு முழுவதும் நிறைந்து கிடக்கிறது. அவர் ஒரு கவிஞர் என்பது கூடுதல் வசதிதான். கச்சிதமும் ஒழுங்கும் கொண்ட வரிகள். பெரும்பாலான வரிகள் நம்மை ஒரு நிமிடமேனும் யோசிக்க வைத்து அதன் அர்த்தத் தளத்துக்குள் நம்மை செலுத்துகின்றன என்பதை இந்தப்புத்த்கத்தின் சிறப்பாகச் சொல்லலாம்.. ’மன்னிக்கப் பழகிவிட்டீர்கள்; குற்றவாளிகள் அதிகமாகிவிட்டார்கள்என்பது ஒரு டிவீட். இந்த ஒரு வரி தமிழ்நாட்டின் மொத்த அரசியல் சூழ்நிலையையே கண்முன் கொண்டுவந்துவிடுகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்த நூலை எந்தப் பக்கத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதும் வாசிப்பவர்களுக்கு ஒரு கூடுதல் வசதிதான்.

மைக்ரோ பதிவுகள் - ராஜா சந்திரசேகர்.

வெளியீடு: சந்தியா பதிப்பகம்,எண்:77, 53ஆவது தெரு, அசோக் நகர்,சென்னை - 600083