ரமாவும் உமாவும்

பொறியில் அகப்பட்டுக்கொண்ட எலி

 மூன்று சிறுகதைகளும், ஒரு குறுநாவலும், நாடகமும் கொண்ட தொகுப்பு இது. ரமாவும் உமாவும் குறுநாவல்.  நாற்பது வயதை எட்டிய இரண்டு குஜராத்திப் பெண்கள் சுற்றுலாவில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஓர் அறை கொடுக்கப்பட்டிருக்கிறது, அங்கே அவர்களுக்குள் ஒரு அந்தரங்க உறவு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது அவர்களுக்குள் நிகழும் உரையாடல்களின்வழியே மொத்தக் குறுநாவலும் சொல்லப்பட்டுவிடுகிறது. அந்த இரு பெண்களின் வாழ்ந்த வாழ்வின் மொத்த வெறுமையும் அப்போது பகிரப்பட்டுவிடுகிறது. அவ்வப்போது படைப்பாளியுடனும் அந்தப் பெண்கள் உரையாடுகிறார்கள். வெளிவந்த போது பரவலான பாராட்டுக்களையும் அதைவிட அதிகமான கண்டனங்களையும் எதிர்கொண்ட படைப்பு இது. ரமாவும் உமாவும் குறுநாவலை மறைந்த ஞாநி அவர்கள் நாடகமாக மேடையேற்றினார் என்பது உபரி செய்தி.  ஒரு எலிய கதை கச்சிதமாக எழுதப்பட்ட ஒரு சிறுகதை. பொறியில் மாட்டிக் கொண்ட ஒரு எலிக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைதான் மொத்தக்கதையும். ‘பூனைகளும் பாம்புகளும் கூட எலிகளை நேசிக்கும் காலம் வந்தாலும் வரும்; ஆனால் மனிதர்கள் மட்டும் எலிகளை வெறுத்துக்கொண்டே இருப்பான்என்கிறது கதையின் ஒரு வரி. மொத்தக்கதையின் ஆதார அம்சம் இதுதான். ஒருதலைபட்சமான அன்பு, கருணை, காருண்யம், நட்பு என எல்லாவற்றையும் பகடியான சித்தரிப்புகளின் வழியே கேள்விக்குள்ளாக்குகிறார் திலீப்குமார். இந்த இரண்டாவது பதிப்பை அழகாகப் பதிப்பித்துள்ளார்கள் க்ரியா பதிப்பகத்தினர்.

ரமாவும் உமாவும் - திலீப்குமார்

க்ரியா, புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 600 041.