தகப்பன் சாமி

பட்டிமன்றங்களிலும் வழக்காடுமன்றங்களிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் சுமதிஸ்ரீயின் கவிதைத்தொகுப்பு இது. பாசமுள்ள தந்தையை விட்டுவிட்டு ஒற்றை ரோஜாவுக்காகவும் ஒரே ஒரு வாழ்த்து அட்டைக்காகவும் ஓடிவந்துவிட்ட மகளின் பாச உணர்வுகளைப் பேசுகிறது முதல் கவிதையான தகப்பன் சாமி. அலர், மஞ்சள், நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒருமணி நேரம்,  மருதாணி போன்ற கவிதைகளில் பெண் மனதின் உணர்வுகளை வடித்துள்ளார். எப்போது பேனா/எடுத்தாலும்/ எழுதிப் பார்க்கிறேன்

உன் நான்கெழுத்துப் பெயரை என்பது போன்று காதலையும் நேசத்தையும் பதிவு செய்யும் வரிகள் பல கவிதைகளில் நிரம்பி உள்ளன. தாத்தா/ சாராயம் அதிகம் /குடித்து செத்துப்போனார்/ பேரன் அதிகமாய்/ சாராயம் குடித்து செத்துப்போனான் என்பது போன்ற வார்த்தை விளையாட்டுகளும் உண்டு.

ஆசிரியர் :சுமதிஸ்ரீ. வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை -17