வேனல்

கலாப்ரியா எழுதியிருக்கும் புதிய நாவலான வேனலில் மானுட வாழ்வும், அதன் உண்மையும், அழகும் நிரம்பிய உணர்வுகளும் நிரம்பியிருக்கின்றன. இந்நாவலில் இடம்பெறும் கால இடைவெளியை மீறி இதில் வரும் பத்திரங்கள், சூலழ்களுடன் நம்மால் எளிதில் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது. எழுதப்பட்ட காலத்தின் பதிவாக நிற்கும் இந்நாவல் மிகுந்த பாராட்டுகளுக்கும் அங்கீகாரங்களுக்கும் உரியதாக உள்ளது என்றே சொல்லமுடிகிறது.

ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய காலகட்ட திருநெல்வேலியில் நகராட்சித் தேர்தலையொட்டி காங்கிரஸ்காரர்கள் வாக்குகள் பெற குடம் வழங்குவதாக இந்நாவலில் வருகிறது. சமீபத்தில் சென்னை ஆர்கே நகர் தேர்தலையொட்டி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் குக்கர் போன்ற பரிசுகள் ஞாபகத்துக்கு வந்து புன்னகையை வரவழைக்கின்றன. கலாப்ரியாவின் வேனல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய நெல்லையை அதே வாசனையுடன் கண்முன் நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பின்வந்த நாவல்களில் தனியிடம் பெறக்கூடியதாக இதைச்சொல்ல முடியும்.

நன்றி : அந்திமழை

பக்கம் : 488

வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை – 83