கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை:

அந்திமழை' இதழில் வெளிவந்த திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் என திரைப்படத்துறை சார்ந்த அனைத்து கலைஞர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.

கமல்ஹாசன், நாசர், பாண்டியராஜன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள், கஸ்தூரி, கெளதமி, நதியா, வரலட்சுமி உள்ளிட்ட நடிகைகள், இளையராஜா, கங்கை அமரன், டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ஆர்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்ட இயக்குநர்கள் என 58 திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்களின் நேர்காணல்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விடுகின்றன.

ஒவ்வொரு கலைஞரும் திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பட்ட துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள், பெற்ற படிப்பினைகள் ஆகியவற்றை எவ்வித ஒளிவுமறைவுமின்றி சொல்லியிருப்பது உள்ளத்தைத் தொடுகிறது. 
நம் மனதில் இந்தக் கலைஞர்களைப் பற்றி ஏற்கெனவே இருந்த பிம்பங்களை, மதிப்பீடுகளை இந்நூல் மாற்றிவிடுகிறது. அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளமாக இருப்பதையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. உழைத்து முன்னேற விரும்பும் அனைவருக்கும் ஊக்கமூட்டும் விதமாக இத்தொகுப்பில் உள்ள நேர்காணல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி : தினமணி நாளிதழ்

வெளியீடு: அந்தி மழை, சென்னை.