அறிவோம் இஸ்லாம்.

இஸ்லாமின் பெருமை:

இஸ்லாம் மார்க்கம் உலகம் முழுக்க விவாதப் பொருளாக உள்ள நிலையில் அதுகுறித்த அடிப்படையான விஷயங்களை எளிய தமிழில் அதேசமயம் ஆழமாக எழுதி வெளியிட்டுள்ளார் இதழாளரும் எழுத்தாளருமான பாத்திமா மைந்தன். இறை நம்பிக்கை,தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்னும் ஐம்பெரும் கடமைகள் மீது கட்டப்பட்ட உறுதியான மாளிகை இஸ்லாம் என்று அறிவிக்கிற இவரது ஆற்றொழுக்கான எழுத்தில் இம்மார்க்கத்தின் அழகுகளை அறிந்துகொள்ள முடிகிறது. ஸலாம் கூறுவதன் மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்கிற நபிகளின் பொன்மொழியைக் கூறி ஸலாம் என்ற

சொல்லின் மேன்மையை உரைக்கிறார். உலகளாவிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கிய உன்னத மார்க்கம் இஸ்லாம் என்கிற நூலாசிரியர் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிற திருமறையின் உயர்வான வாசகங்களை எடுத்துக்காட்டுகிறார். இது போன்ற அங்கங்கே ஒளிரும் வாசகங்களுகாகவே இந்த நூலைப் பத்திரப்படுத்தி வாசிக்கலாம்!

அறிவோம் இஸ்லாம்.

பாத்திமா மைந்தன், வெளியீடு: தினத்தந்தி பதிப்பகம், 86, ஈவிகே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7